மரக்கன்று நடும் நிகழ்ச்சி


மரக்கன்று நடும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 24 March 2022 12:25 AM IST (Updated: 24 March 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

மரக்கன்று நடும் நிகழ்ச்சி

கொள்ளிடம்;
கொள்ளிடம் அருகே உள்ள புத்தூர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய வன நாளை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் பல வகையான மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வட்டார வன அலுவலர் டேனியல், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பானுசேகர், ஊராட்சி தலைவர்கள் வசந்தி ராஜேந்திரன், கனகராஜ், துணைதலைவர் சிவப்பிரகாசம், உடற்கல்வி இயக்குனர் பிரபாகரன் மற்றும் வனச்சரக அலுவலர்கள்,  பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story