மாணவர்களிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் கைது
ராணிப்பேட்டையில் மாணவர்களிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டையில் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் ராணிப்பேட்டை, காரை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த செந்தில் குமார் (வயது 46) என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் இல்லத்தில் உள்ள சுமார் 7 சிறுவர்களிடம், கடந்த ஒரு வருட காலமாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து இல்லத்தின் கண்காணிப்பாளர் விஜயகுமார் ராணிப்பேட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார். மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுகி மற்றும் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து உடற்கல்வி ஆசிரியர் செந்தில் குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் உடற்கல்வி ஆசிரியர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story