திருவாரூரில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்தக்கோரி திருவாரூரில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்தக்கோரி திருவாரூரில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திடக்கோரி திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமை தாங்கினார். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பாலு, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ராஜகோபால், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோஷங்கள் எழுப்பினர்
மாநில சட்ட ஆலோசகர் ஆண்ட்ரூஸ், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் வீரமணி, மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் முகமதுரபீக் கலந்து கொண்டனர்.
அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story