மாணவ-மாணவிகளுக்கு தேர்வு போட்டிகள்


மாணவ-மாணவிகளுக்கு தேர்வு போட்டிகள்
x
தினத்தந்தி 24 March 2022 12:33 AM IST (Updated: 24 March 2022 12:33 AM IST)
t-max-icont-min-icon

மாணவ-மாணவிகளுக்கு தேர்வு போட்டிகள் நடத்தப்பட்டது

பெரம்பலூர்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. விளையாட்டு விடுதிகளில் விளையாட்டுகளுக்கான பயிற்சியை பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7, 8, 9, 11-ம் வகுப்புகளுக்கான மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, ஹேண்ட்பால், ஹாக்கி, நீச்சல், டேக்வோண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபடி, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ் போன்ற விளையாட்டுகள் நடைபெற்றது. மாணவர்களுக்கு கூடுதலாக கிரிக்கெட், ஜிம்னாஸ்டிக்ஸ், மேசைப்பந்து, வில்வித்தை போன்ற போட்டிகளும் நடைபெற்றன. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், அதிக புள்ளிகள் பெற்ற மாணவ-மாணவிகள் மாநில அளவிலான தேர்வு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story