சிறப்பு கிராம சபை கூட்டம்


சிறப்பு கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 24 March 2022 12:49 AM IST (Updated: 24 March 2022 12:49 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை ஒன்றியம் துருசுபட்டி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஆணையர் காமராஜ் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் குடிநீர் சிக்கனம், குடிநீரை பராமரிப்பது, குடிநீரின் தூய்மை உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story