அரசு ஆஸ்பத்திரியில் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்
ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன.
ராஜபாளையம்
ராஜபாளையம் இ.எஸ்.ஐ. காலனி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி வீரலட்சுமி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் வீரலட்சுமி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் ராஜபாளையம் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஒரே பிரசவத்தில் 2 பெண் மற்றும் ஒரு ஆண் என 3 குழந்தைகள் பிறந்தன. இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், “தாய், 3 குழந்தைகளும் நலமுடன் உள்ளனர். அவர்களுக்கு உயரிய சிகிச்சை அளித்து வருகிறோம்” என்றனர்.
Related Tags :
Next Story