தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்
அரசு நிலத்தை தனி நபருக்கு பட்டா வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார்.
விருதுநகர்,
அரசு நிலத்தை தனி நபருக்கு பட்டா வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார்.
பட்டா விவகாரம்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாசில்தார் சுந்தரமூர்த்தி. மேலும் துலுக்கப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மலைப்பாண்டி. இவர்கள் 2 பேரும் விருதுநகர் ஆர்.ஆர்.நகரில் சிப்காட் நிலத்தை தனி நபர் பெயருக்கு பட்டா வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பணியிடை நீக்கம்
இதுகுறித்து விசாரணை நடத்தியதின் அடிப்படையில் தாசில்தார் சுந்தரமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் மலைப்பாண்டி ஆகியோரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து விருதுநகர் கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story