ராஜபாளையத்தில் திடீர் மழை


ராஜபாளையத்தில் திடீர் மழை
x
தினத்தந்தி 24 March 2022 1:16 AM IST (Updated: 24 March 2022 1:16 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராஜபாளையம், 
ராஜபாளையத்தில் திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
கடும் வெயில் 
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்பட்டனர். நீர்வரத்து கால்வாய், கண்மாய், குளங்கள், கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்மட்டம் ெவகுவாக குறைந்து கொண்டே வந்தது. 
கடும் வெயில் காரணமாக குளிர்பானங்கள், இளநீர், தர்ப்பூசணி ஆகியவற்றின் விற்பனையும் அமோகமாக நடைபெற்றது. 
இந்தநிலையில் நேற்றும் வழக்கம்போல் வெயில் வாட்டி வதைத்தது. பின்னர் மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து குளிர்ச்சியான சூழல் இருந்தது. 
திடீர் மழை 
சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. ராஜபாளையம் நகர், தளவாய்புரம், செட்டியார்பட்டி, முகவூர், சேத்தூர், நல்ல மங்களம், புத்தூர், கோவிலூர், சொக்கனாம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. 
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திடீரென பெய்த மழை பயிர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.  ½ மணி நேரம் பெய்த மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. 

Related Tags :
Next Story