பாகற்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை


பாகற்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 24 March 2022 1:18 AM IST (Updated: 24 March 2022 1:18 AM IST)
t-max-icont-min-icon

பாகற்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

தாயில்பட்டி, 
பாகற்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். 
பாகற்காய் சாகுபடி 
தாயில்பட்டி அருகே உள்ள துரைச்சாமிபுரம், பசும்பொன் நகர், விஜயகரிசல்குளம், வல்லம்பட்டி, சேதுராமலிங்காபுரம், பூசாரி நாயக்கன்பட்டி, ஜெக வீரம்பட்டி, கொம்மங்கிபுரம், சிவசங்குபட்டி, அப்பணம்பட்டி, கிருஷ்ணாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 50 ஏக்கர் பரப்பளவில் பாகற்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  கிணறுகளில் பாசனத்திற்கு போதிய அளவில் தண்ணீர் இருப்பதால் 40 நாள் பயிரான பாகற்காயை விவசாயிகள் ஆர்வமுடன் பயிாிட்டனர். பாகற்காய் விளைச்சலை  தொடங்குவதற்கு முன்பு வரை கிலோ ரூ.40 ரூபாய் வரை விலை இருந்தது. இந்த விலை ேமலும் உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் எதிர்பார்த்தனர். 
விலை குறைவு 
இதுகுறித்து விஜயகரிசல்குளம் விவசாயி மாரிமுத்து கூறியதாவது:-
மருத்துவ குணமுள்ள பாகற்காயை எண்ணற்ற பேர் நேரடியாக வந்து விவசாயிகளிடம் வாங்கிச் செல்கின்றனர். 40 நாள் பயிரான பாகற்காய் ஒரு மாதம் மட்டுமே விளைச்சலை தரக் கூடியதாகும். கொடியில் 4 நாட்களுக்கு ஒரு முறை பறிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகற்காய் கிலோ ரூ.40 ஆக இருந்தது. தற்போது கிலோ ரூ.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் பறிப்பு கூலி கூட கிடைக்காமல் சிரமப்படுகிறோம். அதிலும் குறிப்பாக காய்களை  பறிப்பதற்கு கூலியாக ஒரு நபருக்கு ரூ.300 கொடுக்க வேண்டியுள்ளது. தற்போது விலை குறைந்து வருவதால் கூலிக்கு ஆட்களை தேடாமல் குடும்பத்தில் உள்ள நபரே காயை பறித்து வருகிறோம். 
இவ்வாறு அவர் கூறினார்.  

Next Story