பண்ணை குட்டைகள் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது-மந்திரி பி.சி.பட்டீல்


பண்ணை குட்டைகள் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது-மந்திரி பி.சி.பட்டீல்
x
தினத்தந்தி 24 March 2022 1:30 AM IST (Updated: 24 March 2022 1:30 AM IST)
t-max-icont-min-icon

பண்ணை குட்டைகள் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது என்று சட்டசபையில் மந்திரி பி.சி.பட்டீல் தெரிவித்துள்ளார்

பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர் எச்.டி.ரேவண்ணா கேட்ட கேள்விக்கு விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் பதிலளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் விவசாய உபகரணங்களை கொள்முதல் செய்ய கடந்த 2 ஆண்டுகளில் ரூ.800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. 

கடந்த 2019-ம் ஆண்டில் அதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. பண்ணை குட்டைகள் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் பண்ணை குட்டைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறையில் 4,964 இடங்கள் காலியாக உள்ளன. இந்த துறையில் மொத்தம் சுமார் 9 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பி.சி.பட்டீல் கூறினார்.

Next Story