தமிழ் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் தமிழ் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் மாநிலத்தலைவர் நாராயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 46 கிராம விவசாயிகளுக்கு 2021-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் சுப்பா ராஜ், மாவட்ட தலைவர் பாண்டியாபுரம் கணேசன், மாவட்ட செயலாளர் மருதநத்தம் மாரிச்சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story