குளிக்க சென்றவர் குளத்தில் மூழ்கி பலி
குளிக்க சென்றவர் குளத்தில் மூழ்கி பலி
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள திடியன் மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி(வயது 46). இவர் மதுரை மண்டேலா நகரில் ஓட்டல் நடத்தி வந்தார். திடியன் மேட்டுப்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு அவரது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். திருவிழாவில் கலந்துகொண்டு விட்டு நேற்று காலை இந்த கிராமத்தில் உள்ள தாமரைக்குளத்தில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். குளிக்க சென்றவர் திரும்பி வரவில்லை என்பதால் திருமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிந்துபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story