சைபர் கிரைம் போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு
சைபர் கிரைம் போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு தெரிவித்தார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், காமரசவல்லியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த 4 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், போலீஸ் ஏட்டு ஜாஹீர் உசைன், முதல் நிலை போலீஸ்காரர் சுரேஷ்பாபு, போலீஸ்காரர் அரவிந்தசாமி அடங்கிய 5 பேர் கொண்ட தனிப்படையினரை திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் நேரில் அழைத்து சான்றிதழ்கள் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார். மேலும் அவர் இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைம் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story