நெல்லை: முதியவர் தற்கொலை


நெல்லை: முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 24 March 2022 2:25 AM IST (Updated: 24 March 2022 2:25 AM IST)
t-max-icont-min-icon

முதியவர் விஷம் குடித்து உயிரிழந்தார்

நெல்லை:
நெல்லை அருகே உள்ள பிராஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70). இவருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட செல்வராஜ் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story