சேலத்தில் பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தினக்கூலி பணியாளர்களை பணிவரன் முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சேலம்:
பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தினக்கூலி பணியாளர்களை பணிவரன் முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தினக்கூலி ஊழியர்கள்
தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்க சேலம் மாவட்ட மையம் சார்பில் சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாநில தலைவர் பாலன் தலைமை தாங்கினார். பிரசார செயலாளர் ரவிசங்கர் வரவேற்று பேசினார். மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தினக்கூலியாக 10 ஆண்டுகள் பணியாற்றி வருபவர்களை, பணிவரன் முறைப்படுத்த வேண்டும். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற உள்ள முதுநிலையாளர்களுக்கு துணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
பதவி உயர்வு
முறையான பணியிட மாறுதல் வழங்க வேண்டும். 10-ம் வகுப்பு கல்வி தகுதி பெற்ற தினக்கூலி ஊழியர்கள், சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்களுக்கு பட்டு இளநிலை ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் அரசு ஊழியர் சங்க மாநிலத்தலைவர் சிவக்குமார், அமைப்புச்செயலாளர் சுகமதி, சங்க ஆலோசகர் பெரியசாமி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். முடிவில் சங்க மாநில பொருளாளர் ஜோசப் லூர்துராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story