அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் நீக்கம் மீண்டும் வைக்கக்கோரி அ.தி.மு.க.வினர் கோரிக்கை மனு
அ.தி.மு.க.வினர் கோரிக்கை மனு கொடுத்தனர்
தென்காசி:
தென்காசி புதிய பஸ் நிலைய வளாகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டது. இதற்கான பெயர் பலகையில் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்றிருந்தது. தற்போது தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு முதலில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்த நேரத்தில் தேர்தல் விதிமுறையையொட்டி இந்தப்படம் மறைக்கப்பட்டது. தேர்தல் முடிந்த பிறகு இந்தப் படம் அகற்றப்பட்டது. அப்போது இதுகுறித்து அ.தி.மு.க. சார்பில் புகார் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மீண்டும் ஜெயலலிதாவின் படம் அதில் வைக்கப்பட்டது. தற்போது இந்த பெயர் பலகை வைக்கப்பட்டது. அதில் ஜெயலலிதா படத்திற்கு பதிலாக தமிழக அரசு சின்னம் பொருத்தப்பட்டுள்ளது.
இதனை பார்த்த அ.தி.மு.க.வினர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து ஜெயலலிதாவின் படத்தை அதில் வைக்க வேண்டுமென்று தென்காசி நகராட்சி அலுவலகத்தில் நகர செயலாளர் சுடலை தலைமையில் கோரிக்கை மனு கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து தற்போது புதிதாக தேர்வு செய்யப்பட்ட தி.மு.க. தலைவர் சாதிரிடமும் புகார் கூறினர். அவரும் இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமார் நகராட்சி அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
Related Tags :
Next Story