கடந்த 20 நாட்களில் பண்ணாரி அம்மன் கோவிலில் ரூ.93¼ லட்சம் உண்டியல் காணிக்கை


கடந்த 20 நாட்களில் பண்ணாரி அம்மன் கோவிலில் ரூ.93¼ லட்சம் உண்டியல் காணிக்கை
x
தினத்தந்தி 24 March 2022 4:06 AM IST (Updated: 24 March 2022 4:06 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 20 நாட்களில் பண்ணாரி அம்மன் கோவிலில் ரூ.93¼ லட்சம் உண்டியல் காணிக்கை

சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதம் ஒரு முறை கோவில் உண்டியல் எண்ணப்படும். கடந்த 3-ந் தேதி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவிலில் குண்டம் விழா நடைபெற்றது. விழா முடிவடைந்ததை தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல்களை திறந்து எண்ணும் பணி நடைபெற்றது. 
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி பண்ணாரி அம்மன் கோவில் துணை ஆணையர் சபர்மதி, ஈரோடு உதவி ஆணையாளர் அன்னக்கொடி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இந்த பணியில் கோவில் பரம்பரை அறங்காவலர்கள், வங்கி அலுவலர்கள். மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் உண்டியலில் ரூ.93 லட்சத்து 18 ஆயிரத்து 987 காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர். மேலும் 362 கிராம் தங்கம், 874 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். 

Next Story