பெருந்துறை அருகே இறந்து கிடந்த 7 மயில்கள்; விஷம் வைத்து கொல்லப்பட்டனவா? என வனத்துறையினர் விசாரணை


பெருந்துறை அருகே இறந்து கிடந்த 7 மயில்கள்; விஷம் வைத்து கொல்லப்பட்டனவா? என வனத்துறையினர் விசாரணை
x
தினத்தந்தி 24 March 2022 4:06 AM IST (Updated: 24 March 2022 4:06 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை அருகே 7 மயில்கள் இறந்து கிடந்தன. அவை விஷம் வைத்து கொல்லப்பட்டனவா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருந்துறை
பெருந்துறை அருகே 7 மயில்கள் இறந்து கிடந்தன. அவை விஷம் வைத்து கொல்லப்பட்டனவா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்து கிடந்த மயில்கள்
பெருந்துறை சீனாபுரம் அருகே உள்ள தலையம்பாளையம் பகுதியில் தினமும் ஏராளமான மயில்கள் சுற்றி திரிகின்றன. இந்த நிலையில் அங்குள்ள தனியார் நிலத்தில் நேற்று காலை மயில்கள் இறந்்து கிடந்தன.
இதைபார்த்த பொதுமக்கள் உடனே இதுபற்றி ஈரோடு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு 4 ஆண் மயில்களும், 3 பெண் மயில்களும் என மொத்தம் 7 மயில்கள் இறந்து கிடந்தன.
வனத்துறை விசாரணை
பின்னர் மயில்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகே உள்ள வீரணம்பாளையம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
மேலும் மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story