அரசு போக்குவரத்துக்கழக பணிமனையை பள்ளி மாணவ-மாணவிகள் முற்றுகையிட்டு போராட்டம்
அரசு போக்குவரத்துக்கழக பணிமனையை பள்ளி மாணவ-மாணவிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
நெல்லை:
அரசு போக்குவரத்துக்கழக பணிமனையை பள்ளி மாணவ-மாணவிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பஸ் வசதி
பாளையங்கோட்டை திருவண்ணநாதபுரம், பொட்டல், மேலப்பாட்டம், திம்மராஜபுரம், மணப்படைவீடு ஆகிய பகுதிகளில் இருந்து நெல்லை சந்திப்பு பகுதிக்கு போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை.
இந்த கிராமங்களில் இருந்து 4 பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. அந்த பஸ்சும் சரியான நேரத்திற்கு வருவதில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கூடுதலாக பஸ்கள் இயக்க வலியுறுத்தி அந்த பகுதி மாணவ-மாணவிகள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கலெக்டரிடம் மனு கொடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
முற்றுகை போராட்டம்
இதனால் பள்ளிக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று நெல்லை வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு திரண்டு திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி அதில் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story