சங்கரன்கோவில:‘ஸ்மார்ட்’ வகுப்பறை திறப்பு


சங்கரன்கோவில:‘ஸ்மார்ட்’ வகுப்பறை திறப்பு
x

‘ஸ்மார்ட்’ வகுப்பறை திறப்பு விழா நடந்தது

சங்கரன்கோவில:
சங்கரன்கோவில் பாரதியார் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி, ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தார். தலைமை ஆசிரியை முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். விழாவில் நகராட்சி கவுன்சிலர்கள் உமாசங்கர், ஆறுமுகம், கவுசல்யா, செல்வராஜ், குருபிரியா, மாரிச்சாமி, விஜயகுமார், ராமுத்தாய், முத்துமாரி, ராஜேஸ்வரி, புனிதா, அலமேலு, வேல்ராஜ், தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சரவணன், தொண்டரணி துணை அமைப்பாளர் முத்து மணிகண்டன், வக்கீல் ராம்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story