வாசுதேவநல்லூர்: உலக வன நாள் விழா


வாசுதேவநல்லூர்: உலக வன நாள் விழா
x
தினத்தந்தி 24 March 2022 5:17 AM IST (Updated: 24 March 2022 5:17 AM IST)
t-max-icont-min-icon

உலக வன நாள் விழா கொண்டாடப்பட்டது

வாசுதேவநல்லூர்:
தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில் நெல்லை மாவட்ட வனகோட்டம், சங்கரன்கோவில் வனச்சரகம் சார்பில் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி வளாகத்தில் உலக வன நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு உதவி வனப்பாதுகாவலர் மணிகண்டபிரபு தலைமை தாங்கினார். கல்லூரி சேர்மன் வெள்ளைத்துரை பாண்டியன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் கட்டுரை போட்டி, வினாடி வினா, பேச்சுப்போட்டி, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற இப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு, சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.விழாவில் சங்கரன்கோவில் வனச்சரகம் (இருப்பு) புளியங்குடி அலுவலர் ஸ்டாலின், கல்லூரி முதல்வர் ஈஸ்வரன், இப்ராஹிம், தேரிகுமார், ஷேக்உசைன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கரன்கோவில் சரக வனக்காப்பாளர் அனிதா நன்றி கூறினார்.

Next Story