குற்றாலத்தில் சுட்டெரிக்கும் வெயில் அனைத்து அருவிகளும் வறண்டன


குற்றாலத்தில் சுட்டெரிக்கும் வெயில் அனைத்து அருவிகளும் வறண்டன
x
தினத்தந்தி 24 March 2022 5:26 AM IST (Updated: 24 March 2022 5:26 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் சுட்டெரிக்கும் வெயில் அனைத்து அருவிகளும் வறண்டன


தென்காசி:
தென் தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலம் தென்காசி மாவட்டம் குற்றாலம். இங்கு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்யும். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும். குளிர்ந்த காற்று வீசும். இந்த சீசனை அனுபவித்து அருவிகளில் குளித்து மகிழ தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவார்கள். 
இதை தொடர்ந்து மழை இல்லாததால் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் அனைத்து அருவிகளும் வறண்டு காணப்படுகிறன. ஆனாலும் இந்த பகுதிகளில் தற்போது காற்று ஓரளவுக்கு வீசுவதால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. 
வெயில் சுட்டெரித்தாலும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் வறண்ட அருவிகளை பார்த்து ஏமாற்றத்துடன் செல்கிறார்கள்.

Next Story