சாலையோரம் மண் குவியல்


சாலையோரம் மண் குவியல்
x
தினத்தந்தி 24 March 2022 4:26 PM IST (Updated: 24 March 2022 4:26 PM IST)
t-max-icont-min-icon

சாலையோரம் மண் குவியல்

சாலையோரம் மண் குவியல்
வாகனங்களில் எண்ணிக்கை அதிகமாகி வரும் நிலையில் விபத்துகளும் குறைந்தபாடில்லை. பிரதான சாலைகளில் சிறிய பள்ளம் விட பேராபத்தை ஏற்படுத்தும். காரணம் பேட்டை நால்ரோடு பகுதியில் சாலையோரம் மண் குவியல் அதிகமாக உள்ளது. பிற வாகனங்களுக்கு வழிவிடும்போது சாலையோரம் இரு சக்கர வாகனத்தை திருப்பினால் மண் மேட்டில் வாகனம் ஏறி சறுக்கி விடுகிறது. இதனால் பின்னால் வரும் வாகனங்கள் அவர்கள் மீது  ஏறிவிடும் அச்சம் நிலவுகிறது. எனவே  சாலையோரம் உள்ள மண் குவியலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளர். 
குவிந்து கிடக்கும் குப்பை
அவினாசி அருகே பழங்கரை இருந்து தேவம்பாளையம் செல்லும் தனியார் ஸ்பின்னிங் மில் உள்ளது. இந்த சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இந்த குப்பைகளால் பெருந்தொற்று ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
--

Next Story