இந்து முன்னணி-இந்து மக்கள் கட்சியினர் மோதல்
வடமதுரை அருகே இந்து முன்னணி-இந்து மக்கள் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள புத்தூர் பிச்சம்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 21). இந்து மக்கள் கட்சி உறுப்பினர். இவர், கடந்த 22-ந்தேதி தனது உறவினர் ராமன் என்பவருடன் மோட்டர் சைக்கிளில் சென்றார்.
அப்போது புத்தூரை சேர்ந்த இந்து முன்னணி உறுப்பினர்களான ராமர், பழனிச்சாமி மற்றும் சிலர் திருப்பதியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இந்த மோதலில் திருப்பதி, ராமன் ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்களுக்கு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் இருதரப்பினரும் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் இந்து முன்னணியை சேர்ந்த ராமர், பழனிச்சாமி, இந்து மக்கள் கட்சியை சேர்ந்த கருப்பையா, ராமன் உள்ளிட்ட 8 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story