நிலக்கோட்டையில் மின்மயானம்


நிலக்கோட்டையில் மின்மயானம்
x
தினத்தந்தி 24 March 2022 5:13 PM IST (Updated: 24 March 2022 5:13 PM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டையில் மின்மயானம் அமைக்க பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 நிலக்கோட்டை:

 நிலக்கோட்டை பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், தலைவர் சுபாஷினி கதிரேசன் தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு பேரூராட்சி துணைத்தலைவர் முருகேசன், செயல் அலுவலர் சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஜோசப் கோவில் பிள்ளை, செந்தில்குமார், மீனாட்சி நவநீதகிருஷ்ணன், அமுதா, முத்துக்குமார், சாமுண்டீஸ்வரி மணி ஆகியோர் சுகாதாரம், சாக்கடை வசதி, கொசுத்தொல்லை, பாதாள சாக்கடை திட்டம், வெறிநாய் தொல்லை குறித்து பேசினர். 

கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பேரூராட்சி தலைவர் சுபாஷினி கதிரேசன், செயல் அலுவலர் சுந்தரி, சுகாதார ஆய்வாளர் சடகோபி ஆகியோர் பதில் அளித்து பேசினர். 

திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்க, நாய் தொல்லையை கட்டுப்படுத்த, பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். 

மேலும் நிலக்கோட்டையில் மின்மயானம் அமைக்க வேண்டும் என்று கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்ட முடிவில் அலுவலக பணியாளர் மேகநாதன் நன்றி கூறினார். 

Next Story