மினிவேனில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு


மினிவேனில் இருந்து தவறி விழுந்த  தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 24 March 2022 6:17 PM IST (Updated: 24 March 2022 6:17 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே மினிவேனில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கல்லேரிப்பட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 50). ஆரணி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். 

கடந்த 22-ந்தேதி நடுப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் மினி வேனில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்தார். இந்த வேனில் ஏறிய சங்கர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அவரை ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story