நமக்கு நாமே திட்டத்தில் கல்வி உபகரணங்கள் வாங்க ரூ.2 லட்சம்


நமக்கு நாமே திட்டத்தில் கல்வி உபகரணங்கள் வாங்க ரூ.2 லட்சம்
x
தினத்தந்தி 24 March 2022 8:26 PM IST (Updated: 24 March 2022 8:26 PM IST)
t-max-icont-min-icon

நமக்கு நாமே திட்டத்தில் கல்வி உபகரணங்கள் வாங்க ரூ.2 லட்சம் பள்ளி மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டது.

பொன்னேரியில் தமிழக அரசின் பள்ளி கல்வித் துறையின் கீழ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கை கூடுதலாக வாய்ப்புள்ளது எனவும் மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு 6 கணினி, 6 கண்காணிப்பு கேமராக்கள், ஒலிவாங்கி, ஒலிபெருக்கி அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி புதிதாக அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள பொன்னேரி நகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் ரூ.10 லட்சம் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்படுவதற்காக ரூ.3 லட்சத்து 34 ஆயிரம் பங்களிப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி பள்ளி மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் மூலம் ரூ.2 லட்சம் நன்கொடையாக பெற்று அதற்கான வங்கி வரைவேலையை பொன்னேரி நகராட்சி தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதனிடம் நமக்கு நாமே திட்டத்தின் பணி தொடங்குவதற்கான முதல் தவணை தொகையை தலைமை ஆசிரியர் வழங்கினார்.

அப்போது நகராட்சி ஆணையர் தனலட்சுமி, கவுன்சிலர்கள் நீலகண்டன், உமாபதி, மணிமாலாசிலம்பரசன், சமூக ஆர்வலர் சம்பத் ஆகியோர் உடன் இருந்தனர். மீதமுள்ள ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்திற்கான வங்கி வரைவேலை 2 தவணையாக விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.


Next Story