தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் ராஷ்மி சுக்லாவிடம் ரூ.500 கோடி கேட்டு நானா படோலே மானநஷ்ட வழக்கு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 24 March 2022 8:35 PM IST (Updated: 24 March 2022 8:35 PM IST)
t-max-icont-min-icon

தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக ரூ.500 கோடி கேட்டு ராஷ்மி சுக்லாவுக்கு எதிராக நானா படோலே மானநஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளார்.

மும்பை, 
தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக ரூ.500 கோடி கேட்டு ராஷ்மி சுக்லாவுக்கு எதிராக நானா படோலே மானநஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளார்.
 தொலைபேசி ஒட்டுகேட்பு வழக்கு
முந்தைய பா.ஜனதா ஆட்சியில் தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலே குற்றம்சாட்டி இருந்தார். இந்தநிலையில் நானா படோலேவின் போன் உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது தொடர்பாக மாநில முன்னாள் உளவுப்பிரிவு தலைவரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ராஷ்மி சுக்லா மீது புனே போலீசார் சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல சஞ்சய் ராவத், ஏக்னாத் கட்சேவின் போன் உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது தொடர்பாக ராஷ்மி சுக்லா மீது மும்பை கொலபா போலீசாரும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
ரூ.500 கோடி கேட்டு வழக்கு
இந்தநிலையில் ரூ.500 கோடி கேட்டு ராஷ்மி சுக்லா மீது நானா படோலே நாக்பூர் சிவில் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளார். நானா படோலே சார்பில் காங்கிரஸ் மாநில சட்டப்பிரிவு தொடர்ந்த இந்த வழக்கில் ராஷ்மி சுக்லா தவிர புனே குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வைஷாலி சந்துகுடே, மாநில உள்துறை கூடுதல் தலைமை செயலாளர், புனே மற்றும் நாக்பூர் போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்டவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். மனுவில் ராஷ்மி சுக்லா சட்டவிரோதமாக பதிவு செய்த தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 
இந்த மனு குறித்து பதில் அளிக்க ராஷ்மி சுக்லா உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சிவில் கோர்ட்டு நீதிபதி வி.பி. கோரே உத்தரவிட்டுள்ளாா்.

Next Story