ஆரோக்கிய கவச திட்டத்திற்கு புதிதாக 500 ஆம்புலன்சுகள் வாங்க முடிவு; மந்திரி சுதாகர் தகவல்


ஆரோக்கிய கவச திட்டத்திற்கு புதிதாக 500 ஆம்புலன்சுகள் வாங்க முடிவு; மந்திரி சுதாகர் தகவல்
x
தினத்தந்தி 24 March 2022 8:58 PM IST (Updated: 24 March 2022 8:58 PM IST)
t-max-icont-min-icon

ஆரோக்கிய கவச திட்டத்திற்கு புதிதாக 500 ஆம்புலன்சுகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் கிருஷ்ண பைரேகவுடா 108 ஆம்புலன்ஸ் வாகன சேவை தாமதமாக கிடைப்பதாக கூறினார். அதற்கு சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பதிலளிக்கையில் கூறியதாவது:-

  கர்நாடகத்தில் ஆரோக்கிய கவச திட்டத்தின் கீழ் 750 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருக்க வேண்டும். ஆனால் 500 வாகனங்கள் தான் சேவையில் ஈடுபட்டுள்ளன. அதனால் அந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைவாக சேவை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. அதனால் ஆரோக்கிய கவச திட்டத்தின் கீழ் புதிதாக 500 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் தான் கடந்த 2007-ம் ஆண்டு இந்த 108 ஆம்புலன்ஸ் வாகன சேவை தொடங்கப்பட்டது. அந்த வாகனங்களை நிர்வகிக்க ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டது.

  தொடக்கத்தில் நன்றாக தான் சேவை வழங்கியது. ஆனால் நாளடைவில் சரியான சேவை கிடைக்கவில்லை என்று புகார் எழுந்தது. இதனால் அந்த நிறுவனத்தை நீக்கிவிட்டு புதிய நிறுவனத்தை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த நிறுவனம் கோர்ட்டுக்கு சென்றுவிட்டது. அதனால் புதிய நிறுவனத்தை நியமிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
  இவ்வாறு சுதாகர் கூறினார்.

Next Story