அடுத்தடுத்து 2 கடைகளில் பணம் திருட்டு


அடுத்தடுத்து 2 கடைகளில் பணம் திருட்டு
x
தினத்தந்தி 24 March 2022 9:59 PM IST (Updated: 24 March 2022 9:59 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து 2 கடைகளில் பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலு. இவர் உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் சாலையில் மர இழைப்பகம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் இவர் தனது கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். 

இந்த நிலையில் நேற்று காலை வந்து பார்த்தபோது, கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிா்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியில் இருந்த ரூ.50 ஆயிரத்தை காணவில்லை. அவற்றை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. 

மற்றொரு கடை

இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பாலு கடையை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கடை ஷட்டரை உடைத்து பணத்தை திருடிச்சென்றுள்ளனர். மேலும் இவரது கடைக்கு அருகில் உள்ள ஜனகர் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடை பூட்டையும் உடைத்த மர்மநபர்கள் அதில் இருந்த ஒரு மோட்டார் சைக்கிள், ரூ.5 ஆயிரம் ஆகியவற்றையும் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. 
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைகளில் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story