2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர்.
கச்சிராயப்பாளையம்,
கச்சிராயப்பாளையம் அடுத்த கல்வராயன்மலையில் உள்ள வனப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் உத்தரவின்பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் கல்வராயன்மலை வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது மல்லிகைப்பாடி வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்கு பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அவற்றை கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்சிய மர்மநபர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story