கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்


கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 March 2022 10:18 PM IST (Updated: 24 March 2022 10:18 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்ணில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது.

திண்டுக்கல்:

வனவேங்கைகள் கட்சி சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டத்தில், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள குறவர் இனத்தை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள நரிக்குறவர் என்ற பெயரை நரிக்காரர் என்று மாற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கண்ணில் கருப்பு துணி கட்டியபடி கலந்துகொண்டனர்.

Next Story