குன்னூரில் கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கும் பணி


குன்னூரில் கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கும் பணி
x
தினத்தந்தி 24 March 2022 10:18 PM IST (Updated: 24 March 2022 10:18 PM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கும் பணி நடந்தது.

குன்னூர்

குன்னூர் பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மாடல் அவுஸ் குடியிருப்பு பகுதியில் உள்ள 10 வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதியடைந்தனர்.

 இதையடுத்து அங்கு வீடுகளில் புகுந்த மழைநீர் மோட்டார் வைத்து வெளியேற்றப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி தலைவர் ஷீலா கேத்ரீன், துணைத்தலைவர் வாசிம்ராஜா, கவுன்சிலர் வசந்தி மற்றும் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

அப்போது பொதுமக்கள் கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகளை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 


Next Story