ஊட்டி அரசு கல்லூரி மாணவர்கள் 50 பேர் ரத்ததானம்


ஊட்டி அரசு கல்லூரி மாணவர்கள் 50 பேர் ரத்ததானம்
x
தினத்தந்தி 24 March 2022 10:19 PM IST (Updated: 24 March 2022 10:19 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அரசு கல்லூரி மாணவர்கள் 50 பேர் ரத்ததானம் செய்தனர்.

ஊட்டி

ஊட்டி அரசு கலைக்கல்லூரி, இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில், கல்லூரியின் வைர விழாவை ஒட்டி ரத்ததான முகாம் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. முகாமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி தொடங்கி வைத்தார்.

 கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கி பேசினார். ஓய்வுபெற்ற தமிழக போலீஸ் டி.ஜி.பி. டபிள்யூ.ஐ. தேவாரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசும்போது, நான் படிக்கும் காலத்தில் கல்லூரிகள், நவீன தொழில்நுட்பங்கள் அதிகமாக இல்லை. 

தற்போது நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து கல்லூரிகள் அதிகமாக உள்ளது. இந்த நாகரீக வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தை இளைஞர்கள் பயன்படுத்திக்கொண்டு அறிவை வளர்க்க வேண்டும். 

எதிர்காலத்தை நல்லபடியாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்றார். முகாமில் கல்லூரி மாணவ- மாணவிகள் 50 பேர் ரத்ததானம் செய்தனர்.
 முகாமில் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் வினிதா மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story