பலத்த காற்றுடன் கன மழை
கீழ்வேளூர் பகுதியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சிக்கல்:
கீழ்வேளூர் பகுதியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கன மழை
கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயிலும், இரவில் பனிபொழிவும் நிலவி வந்தது. இதனால் பொதுமக்கள் பகலில் வெளியே செல்லவே அச்சப்பட்டு வீடுகளில் முடங்கி கிடந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு திடீரென பலத்த காற்றுடள் கன மழை பெய்தது. இந்த மழை மதியம் 1.30 மணி வரை நீடித்தது.
வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.
இதேபோல தேவூர், நீலப்பாடி, அத்திப்புலியூர், குருமணாங்குடி, குருக்கத்தி, கூத்தூர், வெண்மணி, பட்டமங்கலம், ராதாமங்கலம், இலுப்பூர், வடக்காலத்தூர், இருக்கை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை காணப்பட்டது.
Related Tags :
Next Story