தர்மபுரியில் பல்துறை பணி விளக்க முகாம் கண்காட்சி கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்


தர்மபுரியில் பல்துறை பணி விளக்க முகாம் கண்காட்சி கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 March 2022 10:46 PM IST (Updated: 24 March 2022 10:46 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் பல்துறை பணி விளக்க முகாம் கண்காட்சி கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்

தர்மபுரி:
தர்மபுரியில் நடந்த பல்துறை பணி விளக்க முகாம் கண்காட்சியை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்.
புகைப்பட கண்காட்சி
75-வது சுதந்திர தின விழா “சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா”-வை முன்னிட்டு மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தர்மபுரியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாற்று புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணிவிளக்க முகாம் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி தொடக்கவிழா நேற்று மாலை நடைபெற்றது. கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், சப்-கலெக்டர் சித்ரா விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்க முகாம் கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்து பேசியதாவது:- வருகிற 30-ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் பள்ளிக்கல்வித்துறை, கல்லூரி கல்வி இயக்ககம், கலைப் பண்பாட்டுத்துறை ஆகியவற்றின் சார்பில் நாள்தோறும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த கண்காட்சி மற்றும் நிகழ்ச்சிகளை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிட்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
கலை நிகழ்ச்சிகள்
இந்த கண்காட்சி தொடக்க விழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தியாகிகளின் புகைப்படங்கள், அரசின் பல்வேறு துறை சாதனைகளை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
இதில் மகளிர் திட்ட இயக்குனர் பாபு, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், வேளாண்மை இணை இயக்குனர் வசந்தரேகா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் ஜான்சிராணி, மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story