நகரும் காய்கறி விற்பனை வண்டி வழங்கும் நிகழ்ச்சி
கீழ்வேளூரில் நகரும் காய்கறி விற்பனை வண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சிக்கல்:
கீழ்வேளூரில் தோட்டக்கலைத்துறை சார்பில் நகரும் காய்கறி மற்றும் பழ விற்பனை வண்டி வழங்கும் நிகழ்ச்சி கீழ்வேளூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கீழ்வேளூர் வட்டார ஆத்மா கமிட்டி தலைவர் கோவிந்தராசன் தலைமை தாங்கினார்.ஆத்மா குழு உறுப்பினர் பழனியப்பன், அட்சயலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோட்டக்கலை துறை துணை அலுவலர் செல்வராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் கலந்து கொண்டு 17 பயனாளிகளுக்கு நகரும் காய்கறி மற்றும் பழ விற்பனை வண்டிகளை வழங்கினார். இதில் ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன், துணை தலைவர் புருஷோத்தமதாஸ், பேரூராட்சி தலைவர் இந்திராகாந்தி, கவுன்சிலர்கள் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story