கலெக்டர் அலுவலக பூங்கா சீரமைக்கும் பணி
கலெக்டர் அலுவலக பூங்கா சீரமைக்கும் பணி நடந்தது.
விழுப்புரம்,
விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபாதை வசதியுடன் கூடிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் தினமும் காலை, மாலை வேளையில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த பூங்காவினுள் செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர்களாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அங்கு பாம்புகள் உள்ளிட்ட விஷபூச்சிகளின் நடமாட்டம் இருப்பதால் பூங்காவிற்கு நடைபயிற்சி மேற்கொள்ள வரும் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பூங்காவில் உள்ள முட்புதர்கள் காய்ந்து போயுள்ளதால் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த பூங்காவில் உள்ள முட்புதர்களை அகற்றிவிட்டு சீரமைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவின்பேரில் நேற்று முதல் நகராட்சி ஊழியர்கள், பொக்லைன் எந்திரம் மூலம் அந்த பூங்காவில் படர்ந்திருந்த முட்புதர்கள் முழுவதையும் அகற்றிவிட்டு சீரமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Related Tags :
Next Story