விழுப்புரம் நகராட்சி பூங்காவில் தூய்மைப்பணி
விழுப்புரம் நகராட்சி பூங்காவில் தூய்மைப்பணி நடந்தது.
விழுப்புரம்,
விழுப்புரம் நகராட்சி பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு திடல் மற்றும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான வசதிகள் உள்ளன. இந்த பூங்கா கடந்த சில மாதங்களாக முறையாக பராமரிக்கப்படாமல் பொலிவிழந்து காணப்பட்டது. அதுமட்டுமின்றி பூங்காவினுள் செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர்களாக காட்சியளித்தது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று 50-க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்களை கொண்டு ஒருங்கிணைந்த தூய்மைப்பணி மூலம் பூங்காவை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது முட்புதர்கள் அகற்றப்பட்டு நகராட்சி பூங்கா முழுவதையும் தூய்மை செய்யும் பணி நடந்தது.
இந்த தூய்மைப்பணிகளை நகரமன்ற தலைவர் சக்கரை தமிழ்ச்செல்வி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பூங்காவை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, வார்டு கவுன்சிலர் ஸ்ரீதேவிசுரேஷ்பாபு, முன்னாள் கவுன்சிலர் ரகுபதி, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் திண்ணாயிரமூர்த்தி, ரமணன், தி.மு.க. நிர்வாகிகள் பிரபாகரன், தினேஷ், கள உதவியாளர்கள் குமாரகிருஷ்ணன், விஜய் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story