களியக்காவிளை அருகே பட்டதாரி விஷம் குடித்து தற்கொலை
களியக்காவிளை அருகே பட்டதாரி விஷம் குடித்து தற்கொலை
களியக்காவிளை,
களியக்காவிளை அருகே உள்ள குளப்புறம் வன்னியகோடு பகுதியை சேர்ந்தவர் பிரமிக் டானியல் (வயது43), பட்டதாரி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருடைய தந்தை-தாய் ஏற்கனவே இறந்து விட்டனர். இதனால், அவர் வீட்டில் தனிமையில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலையில் வேகு நேரம் ஆகியும் அவரது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பிரமிக் டானியல் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பிரமிக் டானியல் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
இது குறித்து களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரமிக் டானியல் தற்கொலைக்கான காரணம் என்ன? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story