விழுப்புரம் இந்தியன் வங்கிக்கு கேடயம்


விழுப்புரம் இந்தியன் வங்கிக்கு கேடயம்
x
தினத்தந்தி 24 March 2022 11:12 PM IST (Updated: 24 March 2022 11:12 PM IST)
t-max-icont-min-icon

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக கடன் வழங்கிய விழுப்புரம் இந்தியன் வங்கிக்கு கேடயம் வழங்கப்பட்டது.

வளவனூர், 

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 2020-21-ம் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் மூலம் அதிக அளவில் கடன் வழங்கப்பட்டது. இதில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிகளவு கடன் வழங்கிய இந்தியன் வங்கி விழுப்புரம் மைக்ரோசாப்ட் கிளை முதல் மற்றும் இரண்டாம் இடத்தையும், திண்டிவனம் கிளை மற்றும் தமிழ்நாடு கிராம வங்கி வளத்தி கிளை மூன்றாம் இடத்தையும் பிடித்தது.  இந்த வங்கிகளை கவுரவிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மோகன் கலந்து கொண்டு இந்தியன் வங்கிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, வேளாண் இணை இயக்குனர் ரமணன், கால்நடை மண்டல இயக்குனர் மனோகரன், திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், இந்தியன் வங்கி உதவி பொது மேலாளர் ஜெயலட்சுமி சங்கர், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன், தொழில் முனைவோர் இந்தியன் வங்கி மேலாளர் அனிதா, பாரத ரிசர்வ் வங்கி அன்டன் பால் சாலமன், நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் ரவிசங்கர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டனர்.

Next Story