கிருஷ்ணகிரி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
கிருஷ்ணகிரி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சரோஜ் குமார் தாக்கூர் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
புதிய போலீஸ் சூப்பிரண்டு
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சாய் சரண் தேஜஸ்வி, நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இடமாற்றம் செய்யப்பட்டார். அதற்கு பதிலாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சரோஜ் குமார் தாக்கூர் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இவர் 2010-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்றவர் ஆவார். சேலம், சென்னை சைபர் கிரைம் பிரிவில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பொறுப்பேற்றார். அங்கு சுமார் 10 மாதங்கள் பணியாற்றிய நிலையில், தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்று உள்ளார்.
வாழ்த்து
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற சரோஜ் குமார் தாக்கூருக்கு துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர்.
Related Tags :
Next Story