கிருஷ்ணகிரி அருகே 300 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா
கிருஷ்ணகிரி அருகே 300 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே 300 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா நடந்தது.
எருது விடும் விழா
கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் அருகில் உள்ள பெரியகவுண்டர் கொட்டாயில் எருதுவிடும் விழாவை நேற்று நடத்தினர். இந்த விழாவிற்கு வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகளை கொண்டு வந்திருந்தனர்.
காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்னர் விழாவிற்கு அனுமதித்தனர். குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் காளைகளின் உரிமையாளருக்கு பரிசு வழங்கப்பட்டன. அதன்படி ஒவ்வொரு காளையும் இரண்டு முறை ஓட விடப்பட்டன.
போலீசார் பாதுகாப்பு
இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி மொத்தம் 60 பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவை காண கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.
இதையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் தலைமையில்100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story