நிலத்தகராறில் இருதரப்பினர் மோதல்; 6 பேர் மீது வழக்கு


நிலத்தகராறில் இருதரப்பினர் மோதல்; 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 24 March 2022 11:22 PM IST (Updated: 24 March 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

நிலத்தகராறில் இருதரப்பினர் மோதல்; 6 பேர் மீது வழக்கு

தேன்கனிக்கோட்டை:
தளி அருகே உள்ள குப்பட்டியை சேர்ந்தவர் சென்னம்மாள் (வயது 60). அதே பகுதியை சேர்ந்தவர் நரசிம்மரெட்டி (65). உறவினர்கள். இவர்களுக்குள் நில சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட பிரச்சினையில் சென்னம்மாளை, நரசிம்மரெட்டி தரப்பினர் தாக்கினர். இதுகுறித்து சென்னம்மாள் கொடுத்த புகாரின்பேரில் நரசிம்மரெட்டி (65), பரிமளா (60), நரசிம்மா (55), ராதம்மா (50) ஆகிய 4 பேர் மீது தளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் பரிமளா கொடுத்த புகாரின் பேரில் சென்னம்மாள் (60), மஞ்சுநாத்ரெட்டி (40) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story