அரசு பஸ் மோதி மாணவன் பலி:கிராமத்தினர் சாலை மறியல்


அரசு பஸ் மோதி மாணவன் பலி:கிராமத்தினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 24 March 2022 11:32 PM IST (Updated: 24 March 2022 11:32 PM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் மோதி மாணவன் பலியானதால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை,
சிவகங்கையை அடுத்துள்ள கண்டனி கிராமத்தை சேர்ந்தவர் மூக்கையா, இவரது மகன் விஜின் (வயது5). இவன் அருகில்உள்ள மேலவாணியங்குடியில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.  பஸ் நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடக்க முயன்றபோது எதிரேவந்த அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே விஜின் பலியானான். இந்த சம்பவத்தில் அஜாக்கிரதையாக சிறுவனை இறக்கிவிட்ட பள்ளி நிர்வாகத்தின் மீதும் அரசு பேருந்து ஓட்டுநர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள்  சிவகங்கை இளையான்குடி ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்குவந்த கோட்டாட்சியர் முத்துக்கழுவன் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதைதொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதுதொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் பஸ்டிரைவர் மலைச்சாமி (54), கண்டக்டர் தவமணி (44), பள்ளி தாளாளர் விஸ்வநாதன் (42), வேன் டிரைவர் அழகுசுந்தரம் (42), வேன் உதவியாளர்கள் பரமேஸ்வரி (36), தனலெட்சுமி (39) ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்தநிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யாததை கண்டித்து நேற்று காலை கிராம மக்கள் கண்டனி கிராமத்தில் உள்ள தஞ்சாவூர்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு செந்தில்குமார் சிறுவனின் தந்தையிடம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்்

Next Story