வாலாஜா தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
வாலாஜா தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
வாலாஜா
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா அலுவலகத்தில் அரசு பொது இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இங்கு பதிவு செய்வதற்கு வரும் பொதுமக்களிடம் தவறான படிவங்களை பூர்த்தி செய்து தனிநபர் ஒருவர் பணம் பெறுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு தொலைபேசியில் புகார் வந்தது.
இதையடுத்து புகார் தெரிவித்த நபருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டே கலெக்டர் வாலாஜா தாலுகா அலுவலகத்துக்கு வந்து திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது அங்குள்ள இ-சேவை மையத்துக்கு சென்று படிவம் பூர்த்தி செய்யும் தனிநபரை எச்சரித்து அனுப்பி வைத்தார். மேலும் இனிவரும் நாட்களில் யாரும் படிவங்களை பூர்த்தி செய்ய அனுமதிக்கக்கூடாது என தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story