சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி போக்சோவில் கைது


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி போக்சோவில் கைது
x
தினத்தந்தி 25 March 2022 12:07 AM IST (Updated: 25 March 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கீரனூர்:
இலுப்பூர் அருகே உள்ள தச்சம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 38). தொழிலாளி. ஒரு சிறுமி வீட்டில் பாம்பு புகுந்ததால் அவர் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து பாம்பை அடிப்பதற்காக செல்வராஜ், வீட்டிற்குள் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தார். 

Next Story