மூன்றாம் பாலினத்தவருக்கும் சமஉரிமை அளிக்கும் காலம் விரைவில் வரும். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேச்சு


மூன்றாம் பாலினத்தவருக்கும் சமஉரிமை அளிக்கும் காலம் விரைவில் வரும். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேச்சு
x
தினத்தந்தி 25 March 2022 12:15 AM IST (Updated: 25 March 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மூன்றாம் பாலினத்தவருக்கும் சம உரிமை அளிக்கும் காலம் விரைவில் வரும் என்று மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேசினார்.

திருப்பத்தூ

மூன்றாம் பாலினத்தவருக்கும் சம உரிமை அளிக்கும் காலம் விரைவில் வரும் என்று மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேசினார்.

ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில் திருநங்கைகளுக்கான ஆலோசனைக்கூட்டம் திருப்பத்தூரில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுரேஷ்பாண்டியன், சரவணன், தாசில்தார் சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருப்பத்தூர் மாவட்ட திருநங்கைகள் சங்க தலைவிகள் சரோஜினி, அவந்திகா, அன்பு, கோமதி தலையில் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். இதில் திருநங்கைகள் தரப்பில் பேசுகையில் நாங்கள் அனைவரையும் போல பிறந்து, வளர்ந்து பின்னர், திருநங்கைகளாக வளரும்போது, பெற்றோர்கள்  வீட்டைவிட்டு விரட்டியடிக்கின்றனர். எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு வயது வரம்பின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும். கால்நடைகள் வளர்ப்புக்கு கடன் உதவி, உழவர் சந்தையில் ஒரு கடை திருநங்கைகளுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேசினார். அவர் பேசியதாவது:-

சம உரிமை

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பெற்றோர்கள் வளர்க்கின்றனர். ஆனால் திருநங்கைகளை வேறுபட்ட இனம் என நினைத்து ஒதுக்குகின்றனர். மூன்றாம் பாலினத்தவருக்கும் சம உரிமை  அளிக்கக் கூடிய காலம் விரைவில் வரும். சமூகத்தில் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளை கண்டு சோர்ந்து விடாமல் நம்பிக்கையோடு போராடி வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.
படித்த திருநங்கைகள் காவல் துறையில் சேர விருப்பம் உள்ளவர்களுக்கு படிப்பதற்கான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். தங்கள் கோரிக்கையினை மனுவாக அளித்தால் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஹேமாவதி, சாந்தி, ஜெயலட்சுமி, யுவராணி, சப்-இன்ஸ்பெக்டர் ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story