பாலாற்று பகுதியில் 2 ஏக்கர் அரசு நிலம் மீட்பு


பாலாற்று பகுதியில் 2 ஏக்கர் அரசு நிலம் மீட்பு
x
தினத்தந்தி 25 March 2022 12:16 AM IST (Updated: 25 March 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே பாலாற்று பகுதியில் 2 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டது.

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த அம்பலூர் வட்டம், கொடையாஞ்சி கிராமத்தில் பாலாற்று பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு தரிசு நிலங்களில் சுமார் 2 ஏக்கர் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. 

இதனை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் தேர்தல் துணை தாசில்தார், அம்பலூர் வருவாய் ஆய்வாளர் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்களுடன் சென்று பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு இடத்தை கையகப்படுத்தினர்.

Next Story