பரமத்திவேலூர் தாலுகாவில் காவிரி ஆற்று பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட 22 ஏக்கர் நிலம் மீட்பு-அதிகாரிகள் நடவடிக்கை
பரமத்திவேலூர் தாலுகாவில் காவிரி ஆற்று பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 22 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
பரமத்திவேலூர்:
நீர்நிலை ஆக்கிரமிப்பு
தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதனை மீட்குமாறு சென்னை ஐகோர்ட்டு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, அதனை மீட்குமாறு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில் பரமத்திவேலூர் தாலுகாவில் காவிரி ஆற்று பகுதியில் அதிகளவில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது.
பொக்லைன் மூலம் அழிப்பு
பரமத்திவேலூர் தாசில்தார் கண்ணன், பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலையில் அ.பொன்மலர்பாளையம் கிராமத்தில் காவிரி ஆற்று பகுதியில் 50-க்கும் மேற்பட்டோரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 16 ஏக்கர் நிலங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.
அவற்றில் பெரும்பாலும் பலர் விவசாயம் செய்திருந்தனர். இதனால் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்தனர். இதேபோல் கொத்தமங்கலத்தில் காவிரி ஆற்று பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5.5 ஏக்கர் நிலத்தையும் அதிகாரிகள் மீட்டு, அதில் சாகுபடி செய்திருந்த பயிர்களை அகற்றினர்.
Related Tags :
Next Story